அனைவராலும் அதிகமாக  உபயோகிக்கப்படும் கூக்குளியின் பிளாகரில் சில நாட்களுக்கு முன் நிலையான  பக்கம் (Static Page) எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது.  நிலையான  பக்கம் என்பது இடுகைகள் போல் இல்லாமல் தனித்துவமாக இருக்கும். முக்கியமாக  இந்த பக்கங்கள் வைப்பகத்துகு ( Blog Archive) செல்லாமல் தனியான சுட்டி  மூலம் கையாளப்படும். இந்த புதிய வசதியினால், என்னை பற்றி (About me),  தொடர்பு கொள் (Contact me), அல்லது அறிவிப்புகள் போன்ற பக்கங்களை திறம்பட  உருவாக்கலாம்.
              சரி இந்த புதிய  வசதி மூலம் எப்படி பக்கங்களை உருவாக்கலாம் என்று பார்ப்போம். முதலில்  பிளாகரில் உள் நுழையவும். 
டேஸ்போர்டுக்கு  சென்று  புதிய இடுகை (New Post) பொத்தானை சொடுக்கவும்
உள்ளே  சென்றவுடன் புதியதாய் EDIT PAGES எனும் சுட்டி இருக்கும் அதை சொடுக்கவும்
 அடுத்து  NEW PAGE பொத்தானை சொடுக்கவும் 
தோன்றும் பெட்டியில் தேவையான தகவல்களை உள்ளீடு செய்தவுடன்  சேமிக்கவும்.
பின்பு தோன்றும் பக்கத்தில்,   நாம் உருவாக்கிய பக்கதின் சுட்டி (Link) முகப்பு பக்கத்தில் எவ்விடத்தில்  தோன்ற வேண்டும் என தேர்வு செய்யவும்.
இதைப்போன்று பத்து பக்கங்கள் வரை உருவாக்கலாம்.
