என்னதான் நீ புது மாடல் மொபைல்  வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.
T Nagar போனா டீ  வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?
மா தவம் செஞ்சா  இறைவனை அடையலாம்.
மாதவனாக முடியுமா? 
வண்டி இல்லாமல்  டயர் ஓடும்.
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?
என்னதான் தீனி  போட்டு நீ கோழி வளர்த்தாலும்,
முட்டைதான் போடும்.
நூத்துக்கு நூறெல்லாம் போடாது.
என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.
பால் கொட்டினா வேற  பால் வாங்கிக்கலாம்.
அரிசி கொட்டினா வேற  அரிசி வாங்கிக்கலாம்.
ஆனால்!
ஆனால்!!
தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது
வேர்கடலை வேர்ல  இருந்து வரும்,
அதே மாதிரி
கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?
என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்,
அவிச்ச முட்டை போடாது.
இது மல்லாக்க  படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன்  ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?
