| Food and Drug Administration மற்றும் CTIAThe Wireless  Association போன்ற அமைப்புகள் புற்று நோய் உருவாக்கும் அளவிற்கு, மொபைல்  போனிலிருந்து கதிர்வீச்சு இருப்பதில்லை என்று கூறுகின்றனர்.  ஆனால் Environmental Working Group (EWG) மற்றும் World Health  Organization (WHO) ஆகிய அமைப்புகள் பத்து ஆண்டுகளுக்கு மேல் மொபைல்  போன்களைப் பயன்படுத்தினால், மூளை மற்றும் எச்சில் சுரப்பியில்  புற்றுநோய்க்கான கட்டிகள் வர வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளன.  மேலும் ஒருவரின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் வரவும்  வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளன. குறிப்பாக வளரும் பருவத்தில் உள்ள மூளை  உடைய சிறுவர்களிடம் இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்  தெரிவித்துள்ளன. இன்னும் இரண்டு அமைப்புகள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட  கருத்துக்களை தெரிவித்துள்ளன.  எது எப்படி இருந்தாலும், இத்தகைய சூழ்நிலையில் நாம் எப்படி இயங்க  வேண்டும். மொபைல் போன்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத சாதனமாக  மாறிவிட்ட நிலையில், எந்த அளவிற்கு அதன் பாதிப்பிலிருந்து நம்மைப்  பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பார்க்கலாமே!  1. குறைவான கதிர்வீச்சு உள்ள போன்: மொபைல் போனில்  ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேட்(SARSpecific Absorption Rate) என்று ஒரு  அளவைக் கூறுகின்றனர். மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அனுப்பிப்  பெறுவதற்கு ரேடியோ அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்து கின்றன.  இதனை நம் உடல் தசைகள் உறிஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு  உறிஞ்சப்படும் வகையில் வெளியாகிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர்.  ஒவ்வொரு போனுக்கும் ஒருSAR ரேட் உண்டு. இந்த SAR ரேட் அதிகமாக இருந்தால்,  போனின் கதிர்வீச்சும் அதிகமாக இருக்கும்.  உங்கள் போனின் பேட்டரிக்குக் கீழாக, போனுடைய FCC (Federal  Communications Commission) எண் தரப்பட்டிருக்கும். FCC யின் இணைய தளம்  சென்று, உங்கள் போனின் FCC எண் கொடுத்து அதன் கதிர்வீச்சு மற்றும் அபாய  தன்மையினைத் தெரிந்து கொள்ளலாம்.  EWG.org என்ற தளத்தில், மொபைல் போன்கள் குறித்த தகவல்கள் அடங்கிய  டேட்டா பேஸ் உள்ளது. அங்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் மொபைல் போனின்  அபாயத் தன்மையினை அறிந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் சாம்சங்  நிறுவனத்தின் இம்ப்ரஸன் (Impression) என்னும் போன் தான் மிக மிக குறைவான  கதிர்வீச்சு உடையது.  மோட்டாரோலாவின் மோட்டோ வியூ 204 மற்றும் டி–மொபைல் மை டச் 3ஜி ஆகியவை  அதிக கதிர் வீச்சு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான  மொபைல் போன்களில் மோட்டாரோலா ட்ராய்ட், பிளாக்பெரி போல்ட் 9700, எச்.டி.சி.  மேஜிக் மற்றும் எல்.ஜி.சாக்லேட் டச் ஆகியவை அதிகமான கதிர்வீச்சு உள்ளதாக  அறிவிக்கப் பட்டுள்ளது.  இந்த ஆண்டு போன்களில் மிகவும் குறைவாக கதிர்வீச்சு உள்ளவையாக  மோட்டாரோலா ப்ரூட் ஐ680, சாம்சங் மிதிக், பான்டெக்ஸ் இம்பேக்ட் (Motorola  Brute i680, Samsung Mythic, and Pantech Impact) அறிவிக்கப்பட்டுள்ளன.  (இவற்றில் சில இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வராமல் இருக்கலாம்) எனவே  நீங்கள் வாங்கும் போன் குறைவான கதிர்வீச்சு உள்ளதாக வாங்குவது நலம்.  2. ஹெட்செட் / ஸ்பீக்கர்: போனுடன் ஹெட்செட் அல்லது  ஸ்பீக்கரை இணைத்துப் பயன்படுத்துவது பயன் தரும். ஏனென்றால் போனை உடலுடன்  ஒட்டி இல்லாமல் வைத்துக் கொள்ளலாம். போனை ஸ்பீக்கர் மோடில் வைத்து  இயக்குவதனால், போன் கதிர் வீச்சு தலைக்குச் செல்லாமல் பார்த்துக்  கொள்ளலாம்.  3. அதிகம் கேள், குறைவாகப் பேசு:  போனில் நாம் பேசும் போதும், டெக்ஸ்ட் அனுப்பும்போதும் கதிர்வீச்சு அதிகம்  இருக்கும். ஆனால் வரும் அழைப்பினைக் கேட்கும் போது இது குறைவாக இருக்கும்.  எனவே குறைவாகப் பேசுவது நல்லது.  4. பேசும்போது ஏற்படும் கதிர்வீச்சினைக் காட்டிலும், டெக்ஸ்ட்  அனுப்புகையில் குறைவான வீச்சே இருக்கும். எனவே அதிகம் டெக்ஸ்ட்  பயன்படுத்தவும்.  5. சிக்னல் வீக்? மூடிவிடு: உங்கள் போனுக்கான  சிக்னல் குறைவாக இருந்தால், உங்கள் போன் ஒலி அலையைப் பெற முயற்சிக்கையில்  கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே அப்போது பேச முயற்சிப்பதை நிறுத்தி,  பின் சிக்னல் அதிகமாக இருக்கையில் பேசவும்.  6. சிறுவர்களே கவனம்: சிறுவர்களின் உடல் மற்றும்  மூளை பெரியவர்களைக் காட்டிலும் அதிகம் மொபைல் கதிர்வீச்சின்  பாதிப்புக்குள்ளாகும். எனவே சிறுவர்களை மொபைல் பயன்படுத்து வதிலிருந்து  தடுக்கவும்.  7. மூடிகளா? வேண்டாம்: மொபைல் ஆன்டென்னா மூடி, கீ  பேட் மூடி போன்றவை போனுக்கு வரும் சிக்னல்களை ஓரளவிற்குத் தடுப்பதால்,  சிக்னல்களைத் தெளிவாகப் பெற உங்கள் போன் அதிக கதிர்வீச்சினை அனுப்பும்.  எனவே இந்த வகை மூடிகளைப் பயன்படுத்துவதனைத் தடுக்கவும்.  அறிவியல் சாதனங்கள் நம் வாழ்வில் வளம் சேர்த்தாலும், இது போல  ஆபத்துக்களையும் தாங்கியே வருகின்றன. நாம் தான் இத்தகைய  இடர்ப்பாடுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் | 
