|  தலைமுடி உதிர்வோருக்கு புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்தியம்  குறைவாகக் காணப்படுவதாக அண்மைய மருத்துவ ஆய்வொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 30  வயதளவில் முடி உதிரும் ஆண்களுக்கு புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்தியம்  மிகவும் குறைவாகக் காணப்படுவதாக அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள்  குறிப்பிட்டுள்ளனர்.    2000 ஆண்களிடம் வொஷிங்டன் மருத்துவ கல்லூரி ஆய்வாளர்கள் நடத்திய  ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.    குறைந்த வயதில் முடி உதிரும் ஆண்களுக்கு புற்று நோயின் தாக்கங்கள்  குறைவாகவே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    50 வயதை அடையும் ஆண்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் முடி  உதிர்வுப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. |