ஆனால் இவற்றை  நாம் செல்லும் இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினம். மேலும் இவையும்  நிலையாகப் பல ஆண்டுகளுக்கு இவற்றைக் கொண்டிருக்குமா என்பதுவும் ஐயமே. 
ஆன்லைனில்  பல தளங்கள், மாதக்கட்டணம் பெற்றுக் கொண்டு நம் பைல்களை ஸ்டோர் செய்து  வைக்கின்றன. இதற்கென பல நிலைகளில் கட்டணங்கள் அடங்கிய திட்டங்களை  வழங்குகின்றன. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மையும் முழுமையானதாக இல்லை. 
இந்த  வகையில் இலவசமாக சேவை செய்திடும் சிலதளங்கள், பாதுகாப்பிற்கு  அனுப்பப்படும் பைல்களின் அளவு, தன்மை, தளங்களுக்கான இணைப்பு ஆகியவை  குறித்து பல வரையறைகளைக் கொண்டுள்ளன. எனவே இவற்றை எந்த அளவிற்கு  நம்பிக்கையுடன் நம் பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியும் என்பது கேள்விக்  குறியே. ஆனால் நம் அருகிலேயே ஓர் அருமையான ஆன்லைன் சேவிங் தளம் உள்ளது  என்பதனை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. அதுதான் ஜிமெயில். உலகில் இயங்கும்  இமெயில் சேவைகளில் தலையானதும் மிகச் சிறந்ததுவும் ஜிமெயில் என அனைவரும்  ஒப்புக்கொண்டுள்ளனர். 
ஜிமெயில் ஸ்பாம் மெயில்களைத் தடுப்பதில்  சிறப்பாகச் செயல்படுகிறது. நம் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. 7  ஜிபிக்கும் மேலாக நம் மெயில்கள் மற்றும் இணைப்புகளுக்கு இடம் தருகிறது.  இந்த அளவும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது. நமக்கு ஜிமெயில் தரும் இட  வசதியில், மிகக் குறைந்த அளவே நாம் பயன்படுத்துகிறோம். ஜிமெயில் தளம்  சென்றவுடன் இந்த செய்தி நமக்குக் காட்டப்படும். எனவே இந்த பயன்படுத்தாத  ஜிமெயில் டிரைவ் இடத்தை ஏன் நாம் நம் பைல்களைப் பாதுகாத்து வைக்கும்  இடமாகப் பயன்படுத்தக் கூடாது. 
இந்த வகையில் ஜிமெயில் டிரைவ் என்ற  ஒரு வசதியை கூகுள் தருகிறது. ஜிமெயில் டிரைவ் நம் கம்ப்யூட்டரில் உள்ள மை  கம்ப்யூட்டரில் ஒரு சிஸ்டம் பார்ட்டிஷனை ஏற்படுத்துகிறது. இதனை நம்  விண்டோஸ் எக்ஸ்புளோரருடன் இணைக்கிறது. ஆன்லைனில் கூகுள் தரும் டிரைவ்  இடத்தை, நம் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் போலப் பயன்படுத்தும் வசதியினைத்  தருகிறது. நம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட ஒரு டிரைவ் போல இந்த ஆன்லைன்  ஜிமெயில் டிரைவ் இயங்குகிறது. எனவே பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள  டிரைவிலிருந்து ட்ராக் அண்ட் ட்ராப் வசதி மூலம் இந்த ஆன்லைன் டிரைவில்  இழுத்துவிட்டு காப்பி செய்திடலாம். இதிலும் சில வரையறைகள் உள்ளன. பைல்  ஒன்று 25 எம்பி என்ற அளவிலே தான் இருக்க வேண்டும். இந்த வரையறையைச்  சமாளிக்க ஜிமெயில் டிரைவ், பைலைப் பிரித்து அடுக்கி வைத்துக் கொள்கிறது. 
புதிய  போல்டர்களை உருவாக்குவது, பைல்களை காப்பி, பேஸ்ட் மற்றும் டெலீட்  செயல்பாடுகளுக்கு உள்ளாக்குவது போன்றவற்றை ஜிமெயில் டிரைவில்  மேற்கொண்டாலும், இதற்கென தனியாக ஒரு டிரைவ் எழுத்து தரப்படுவதில்லை. 
மேலும்  பைல்களின் பெயர்கள் 40 கேரக்டர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. உங்களிடம்  ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், இந்த ஜிமெயில் டிரைவினை எப்படிப் பெறுவது  என்று பார்ப்போம். 
முதலில் உள்ள முகவரிக்கு செல்லவும். இந்த இணையப்  பக்கத்தில் கீழாக ஸ்குரோல் செய்து செல்லவும். இதில் இரண்டு டவுண்லோட்  லிங்க் தரப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஒன்றில் கிளிக் செய்து அதனை எளிதாக  இயக்கும் வகையில் டெஸ்க் டாப்பில் வைத்துக் கொள்ளவும். அடுத்து  gmailfs115.zip இந்த பைலை அன்ஸிப் செய்திடவும். அனைத்து பைல்களையும்  எக்ஸ்ட்ராக்ட் செய்து பெற்ற பின்னர் gmailfs115 என்ற போல்டருக்குச்  செலல்வும். பின் இதில் உள்ள செட் அப் பைல் மீது டபுள் கிளிக் செய்திடவும்.  இப்போது பைல் திறக்கும் செயலுக்கான எச்சரிகை வந்தால், அதனைக் கண்டு  கொள்ளாமல் கீதண கட்டளை கொடுக்கவும். 
இந்த புரோகிராம் உங்கள்  கம்ப்யூட்டரில் முழுமையாக இன்ஸ்டால் ஆகும். உங்கள் கம்ப்யூட்டரில் சில  மாற்றங்களை ஏற்படுத்தும். பின் உங்கள் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத்  திறந்து பார்த்தால், அங்கே Other என்ற வகையில் புதியதாக டிரைவ் ஒன்று  இருப்பதனைப் பார்க்கலாம். பின் GMail Drive என்பதில் டபுள் கிளிக்  செய்திடவும். இங்கே லாக் இன் விண்டோ திறக்கப்படும். இங்கு கிடைக்கும் யூசர்  நேம் மற்றும் பாஸ்வேர்ட்களுக்கான பீல்டுகளில் உங்கள் ஜிமெயில் யூசர் நேம்  மற்றும் பாஸ்வேர்டினைத் தரவும்.இதில் உள்ள ஆட்டோ லாக் இன் டிக் செய்து  வைத்தால், அடுத்த முறை இன்டர்நெட் இணைப்பு கிடைத்தவுடன், நீங்கள் தானாகவே  லாக் இன் செய்துவிடுவீர்கள். 
லாக் இன் தகவல்களைத் தந்த பின் ஓகே  கிளிக் செய்திடும் முன் சில ஆப்ஷன்களை நீங்கள் படித்தறியலாம். More பட்டனை  அழுத்தினால் இவை கிடைக்கும். இதில் 'Preserve Filenames' என்ற ஆப்ஷனைக்  கட்டாயம் தேர்ந்தெடுக்கவும். 
அடுத்து மிக முக்கியமானதான Use Secure  HTTP என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள்  கம்ப்யூட்டருக்கும் ஜிமெயிலுக்கும் உள்ள இணைப்பிற்குப் பாதுகாப்பளிக்கும். 
இறுதியாக  Use Draft Folder என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் பைல்களை  ட்ராப்ட் போல்டருக்கு அனுப்பும். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸுக்குத் தொல்லை  கொடுக்காது. 
முக்கியமான அனைத்து செட்டிங்ஸ் மேற்கொண்ட பின்,  ஜிமெயிலுக்கு இணைப்பை ஏற்படுத்த ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து ஜிமெயில்  டிரைவ் காட்டப்படும். இதில் பைல்களை இழுத்துச் சென்று விடலாம். பைல்கள்  அனைத்தும் ஜிமெயில் ட்ராப்ட் போல்டரில் விழும். பைல் மாற்ற வேகம் உங்கள்  இன்டர்நெட் இணைப்பைப் பொறுத்து இருக்கும்.