கொஞ்ச நாளைக்கு நாம வெளியூர் போயிடறோம்னு வச்சுக்கோங்க. அல்லது  அலுவலகத்திலிருந்து வெளியே போயிட்டு வர கொஞ்சம் லேட்டாகும்னு வச்சுக்கோங்க.  இதுக்கிடையில வர்ற இமெயில்களுக்கு பதில் அனுப்ப "Auto Reply"  அல்லது "Vacation  response" என்ற வசதியை நாம உபயோகப்படுத்திக் கொள்வோம். அதுல நாம  என்ன பதில் அனுப்ப விரும்புகிறோமோ அதைப் பதிவு செய்துவிட்டால், எந்த மெயில்  வந்தாலும், நாம் பதிவு செய்து வைத்த பதில் உடனடியாக அவர்களுக்கு  அனுப்பப்பட்டு விடும். 
சில பேரு எப்படிப்பட்ட பதிலைப் பதிவு  செய்யறதுன்னே தெரியாம முழிச்சுக்கிட்டிருக்காங்க. அவங்களுக்காக ரூம் போட்டு  யோசிப்போர்கள் சங்கத்தின் உறுப்பினர் ராவெல்லாம் கண் முழிச்சி எழுதியது  இதோ.
1. நான் இப்போ நேர்காணலுக்குப் போயிட்டிருக்கேன். வேலை  கிடைச்சவுடனே பதில் அனுப்பறேன். [இவர் கடைசிவரை பதிலே அனுப்பமாட்டார்!!
2.  உங்களுடைய மெயிலுக்கு நன்றி. இந்த மெயில் க்யூவில் சேர்க்கப்பட்டுள்ளது.  277வது மெயிலாகச் சேர்க்கப்பட்டிருப்பதால் 17 வாரங்களுக்குள் பதில்  எதிர்பார்க்கலாம்.
3. இந்த இமெயில் சர்வரில் சிறு பிழை இருப்பதால்  உங்கள் மெயிலை உரியவரிடம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து  உங்கள் கம்ப்யூட்டரை 'ரீஸ்டார்ட்' செய்யவும். பிறகு பிரவுசரின் 'கேச்'சை (cache)  சுத்தம் செய்யவும். பின்னர் மீண்டும் இந்த மெயிலை அனுப்பவும். (நீங்கள்  திரும்பி வந்தவுடன் எத்தனை பேர் எத்தனை தடவை முட்டாள்களாக்கப்  பட்டிருக்கிறார்கள் என்பதை உங்கள் இன்பாக்ஸில் பார்த்துத்  தெரிந்துகொள்ளலாம்)
4. நாங்கள் எங்கே வேணும்னாலும் எத்தனை தடவை  வேண்டுமென்றாலும் வெளியே போவோம். நீங்க எங்கேயும் போயிடாதீங்க. ஸ்டே  ட்யூண்டு அட் யுவர் பி.சி. என்னுடைய பதில் விரைவில் வரும்.
5.  என்னோட மேனேஜர் என்கிட்ட என்னோட சம்பள உயர்வு பத்தி பிஸியா பேசிக்கிட்டு  இருக்கறதால நீ எதுக்கும் கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடி மெயில் அனுப்பு.
6.  உங்கள் மெயிலுக்கு நன்றி. உங்கள் கிரெடிட் கார்ட் கணக்கிலிருந்து $27.40  கழிக்கப்பட்டுள்ளது. [எத்தனை பேர் அவங்க கிரெடிட் கார்டை செக் பண்றாங்கன்னு  மட்டும் பாருங்க]
7. என்னை என்னுடைய கம்பெனியின் மனிதவளப்  பிரிவுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு என் மூளை தேவையில்லை  என்பதால் அதை ஆபரேஷன் மூலம் அகற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
8.  இன்னாபா மெயில் அனுப்பி இருக்க...நல்ல கலீஜாக்கீற ஃபிகர் உள்ள மெயிலா  அனுப்புப்பா.
9. நீங்கள் அனுப்பிய மெயிலில் வைரஸ் உள்ளது.  சந்தேகமிருந்தால் இன்னும் பத்து பேருக்கு ஃபார்வேர்ட் பண்ணி வைரஸ் உள்ளதா  என சரிபார்த்துக்கொள்ளவும்.
10. உங்கள் மெயிலை பயனாளர் வெளியே  சென்றிருப்பதால் அவரது மொபைலுக்கு எஸ்.எம்.எஸ். ஆக அனுப்ப முயற்சி  மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மொபைல் பிஸியாக இருப்பதால் அனுப்ப முடியவில்லை.  நீங்கள் எதற்கும் இன்னொரு ஐந்து நிமிடம் கழித்து மெயில் அனுப்பவும்.
11.  இந்த மெயில், ஸ்பாம் மெயிலாகக் கண்டறியப்பட்டுள்ளது. இன்னொரு தடவை  அனுப்பினால் சைபர் கிரைம் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள்.
