
உங்களிடம் இரண்டு கணினிகள் இருக்கின்றதா? கோப்பு  பறிமாற்றத்திற்கு சிரமப்படுகிறீர்களா? உங்களுக்கான தீர்வைக் குறைந்த  செலவில் எப்படி அடைவது என்று காண்போம்.
இரண்டு  கணினிகளும் மடிக்கணினிகளாகவோ அல்லது மேசைக்கணினிகளாகவோ அல்லது ஒன்று  இதுவும், மற்றது அதுவுமாகவோ இருக்கலாம். ஆனால் எண்ணிக்கை இரண்டு மட்டுமே  இத்தீர்வில் சாத்தியம். switch/hub போன்ற உபகரணங்கள் தேவையில்லை, எனவே வீண்  செலவின்றி இரண்டு கணினிகளுக்கு இடையே வலையமைப்பு செய்யலாம்.
தேவையான  பொருட்கள் :
குறுக்கிணைக்கப்பட்ட  CAT5 வடம் (நீளம் தேவைக்கேற்ப), Windows XP நிறுவப்பட்ட இரண்டு கணினிகள்  (available with Network Card)  :D.
குறுக்கிணைக்கப்பட்ட CAT5 வடம் (crosswired cat5  cable with rj45 Jack) என்று கேட்டு தேவைக்கேற்ற நீளத்தில் கடையில்   வாங்கிக் கொள்ளுங்கள். ரொம்ப பொழுதுபோகாமல் இருந்தால் சொந்தமாக நாமே கூட  தயார் செய்து கொள்ளலாம். தெரிந்து கொள்ள விரும்புவர்கள் பின்னூட்டத்தில்  தெரிவித்தால் தனிப்பதிவாக வ்ழங்கப்படும்.
முதல் கணினியில்  control panel -> network connections  என்ற இடத்திற்கு செல்லவும்.  அங்கு Local Area Connection என்ற நிரலை வலது பக்கமாக சொடுக்கி, properties  என்ற வசதியைத் தேர்ந்தெடுக்கவும்.  அடுத்துத் தோன்றும் படிவத்தில்  'Internet Protocol (TCP/IP)' என்பதனை தேர்வு செய்து விட்டு 'Properties'  என்ற பொத்தானை அமுக்கவும்.
பின்  IP Address :192.168.1.2, Subnet mask: 255.255.255.0, Default  Gateway : 192.168.1.1 என உள்ளிடுகளை வழங்கவும். மேலும் விபரங்களுக்குப்  படங்களை சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்.
அதே செயல்களை அடுத்த  கணினியிலும் அச்சுப் பிசகாமல் செய்யவும், கடைசியில் கொடுக்கும்  உள்ளிடுகளைத் தவிர. இரண்டாவது கணினியில் IP Address :192.168.1.3, Subnet  mask: 255.255.255.0, Default Gateway : 192.168.1.1 என்று வழங்கவும்.
பின்னர் தயாராக  இருக்கும் CAT5 வடத்தை உபயோகித்து இரண்டு கணினிகளின் 'Network Card' மூலம்  இணைக்கவும். 
எல்லாம் தயார். இனி  எந்த ஒரு கணினியிலும் தேவையான தொகுப்பை (directory) வலதுபுறம் சொடுக்கினால்  பகிர்ந்து அளிக்கும் வசதி உள்ளது (sharing). அதனைப் ப்யன்படுத்தி  கோப்புக்களைப் பறிமாற்றம் செய்து கொள்ளலாம்.

