இணையத்தில் அசலாக வேட்டையாடலாம்

இணையத்தில் A முதல் Z வரை தேடுவதற்காக பயன்படுத்துகிறோம் ஆனால் அதிலும் மிக திறமையாக தேடுவோர் மிக சிலரே. காரணம் சரியான யுத்திகள் தெரியாமல் இருப்பதுதான்  என்பேன். இந்த இடுகையில் நோக்கம் தேடுதலை செம்மையாக்குவதே.


தேடுதளங்கள் அடிப்படையில் பல ராகங்களாக இருந்தாலும் முதன்மையாக பிரிப்பது "தேடும் விதம்" மற்றும் "தேடுமிடம்".


தேடும் விதம் என்றால், நாம் தரும் கேள்விக்கு அந்த எந்திரம் எப்படி தேடுகிறது என்கிற முறையில் பகுக்கப்படுவது. {Informative analysis}
இதில், 
க்ராவலர் தேடுதளங்கள் 
அடிக்கடி தங்கள் (crawler)  இயக்கிகள் மூலம் எல்லாதளங்களுக்கும்  தவழ்ந்தச்  சென்று செய்திகளை சேகரித்துக் கொண்டுவரும். இதன் மூலம் தங்கள் சொந்த தகவல்தளத்தில்  (database) சேமித்துக்கொள்ளும். இதன் தொழிற்நுட்பம்  மிகவும் வரண்டது ஆனால் இதுதான் பிரதானமாக பயன்படுகிறது.
அடுத்ததாக சில தளங்களின் தேடுபொறி தான் தேடாமல் அடுத்த, அதாவது க்ராவலர் வகை தளங்களிடமிருந்து பெற்றுத்தரும் இவை மேட்டதேடல் {தமிழ்ப்பதமாக உருவகத்தேடல் எனக் கொள்ளலாம்). இவற்றின் சிறப்பு, ஒரே தேடலை பலதளத்தில் தேடிய புண்ணியம் தரும்.

அடுத்ததாக திரள் தேடுதளங்கள் எனலாம். கூகிள் போன்றவை ஒரே பரிமாணத் தேடலைத்தரும்  ஆனால் இவை முப்பரிமாணத் தேடல்களைத்தரும். இதை நான் கூறுவதைவிட அனுபவித்துப்பாருங்கள் 
அடுத்ததாக கணித்துவத் தேடுதளங்கள். இவை முன்னதைப் போல பரந்த பதிலைத் தருவதில்லை மாறாக கூர்மையான பதிலைத்தரும். நாம எதைத்தேடுகிறோமோ அதனைப் பற்றி மட்டும் விவரிக்கும் .இத்தகையத் தேடலில் வினைத்தொடர்களாக கேள்வியைக் கேட்க கூடாது. 

சொற்பொருள் தேடுதளங்கள் (sematic search engine) இவை HTML அல்லாத மற்றுவடிவ கோப்புகளிலிருந்தும் தேடலைச் செய்யும். இதில் டிவிட்டரையும் சேர்த்துத் தேடும் 
இவற்றும் மேல் சமுகத் தேடுதளங்கள் உள்ளன. இவை பெரிதாக தகவலைத்  திரட்டத்தேவையில்லை மக்கள் மக்களுக்காக பதில்களை இட்டுச்செல்வார்கள் நாமும்  தெரிந்த கேள்விக்கு பதிலளிக்கலாம். இதன் சிறப்பு என்னவென்றால் உங்களுக்கு கிடைக்கும் பதில்கள் அனுபவப் பூர்வமானது.
என்றால் ஒரு குறிப்பிட்ட விஷயங்கள் சார்ந்த தேடும் தளங்களாகப் பிரிக்கப்படுவது (subject analysis).  நாம் குறிப்பிட்ட துறை பற்றி தெளிவாகப் பெறலாம்.

செய்திகளுக்கானத் தேடலுக்கு வேலைவாய்ப்புத் தேடலுக்கு 

சொத்துடமை தேடலுக்கு வணிகத் தேடலுக்கு 
மேலதிகத் தளங்களுக்கு:http://searchenginewatch.com/2156331

கண்ணொளித் தேடலுக்கு 
இப்படி தேடுமிடப்பிரிவுகள் பல...

சில தேடு தளங்களின் தொகுப்புக்கள் இங்கே 
இப்போது இணையத்தில் உங்கள் தேடுதலுக்கான விடை எங்கே கிடைக்கும் என்ற விடை உங்களுக்கு கிடைத்திருக்கும்.
 
எப்படித் தேடுவதென்ற சில யோசனைகளைப் பகிர்கிறேன்.

  • ஆங்கிலத்தில் தேடும் பொழுது  "a", "the", "an" போன்ற எழுத்துக்கள் தவிர்க்கவும் 
  • எழுத்துப் பிழையற்ற சரியானச் சொற்களைப் போட்டுத்தேடவும் 
  • தேடும் பொழுது +,|,-," போன்ற கணினி குறிகளைப் பயன்படுத்துங்கள்.
  • தேடுதலை செழுமைபடுத்த filetype, site, info போன்ற கட்டளைகளுடன் கொடுத்து கூர்மையான பதிலை பெறலாம்.

இப்போது விளக்கம்:


இரண்டு சொற்களை ஒரே நேரத்தில் தேட வேண்டுமா!
+   இரண்டு சொற்களுக்கிடையே இந்த கூட்டல் குறியைப் போட்டுத்தேடினால் இரண்டு சொற்களும் கொண்ட விடையைத்தான் முதலில் தரும் .

ஆசியாவை தேடவேண்டும் ஆனால் பாகிஸ்தான் பற்றி தேடக்கூடாதா!
- இரண்டு சொற்களுக்கிடையே இந்த கழித்தல் குறியைப் போட்டுத்தேடினால் அந்த சொல்லைத்தவிர்த்து விடைகளைத் தரும் 

கவிதைகள் அல்லது கதைகள் மட்டும் தேடவேண்டுமா!
|  என்ற அல்லது குறியை {பொதுவாக என்டர் பட்டனுக்கு மேலேயிருக்கும்} இரண்டு சொற்களுக்கிடையே பயன்படுத்தினால் இரண்டில் ஏதேனும் ஒரு சொல் இருந்தாலும் அந்த பக்கத்தை விடையாகத்ததரும்.

ஒரு வாக்கியத்தை அப்படியே தேட வேண்டுமா?
"" என்ற மேற்குறிகளுக்குள் நாம் சில சொற்களையிட்டுத் தேடினால் அந்தசொற்களை அப்படியே தேடும் //intitle:பழைய டைரி// என்று போட்டால் இந்த வாசகம் தலைப்புக்களில் இருக்கிறதாவென்று  தேடும். 
//allintitle:// என்பது இதன் பன்மைக் கட்டளை அதிகமான சொற்கள் தேடும் பொழுது இதைபயன்படுத்தலாம் 

//intext:பழைய டைரி// என்று போட்டால் இந்த வாசகம்  செய்திகளில்  இருக்கிறதாவென்றும் தேடும். 
//allintext:// என்பது இதன் பன்மைக் கட்டளை எனக்கொள்ளலாம்.

//inurl:பழைய டைரி// இவை தளத்தின் முகவரியில் மட்டும் தேட 
//allinurl://  என்பது இதன் பன்மைக் கட்டளை எனக்கொள்ளலாம்.

site: என்பது தேவையான ஒரு கட்டளை. ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டும் தேட இதை பயன்படுத்தலாம்.  'site:தளமுகவரி' என்று போட்டு அதன் பிறகு கேள்வியைப் போட்டால் அந்த தளத்தை மட்டும் தேடும் 
உதா:  //site:vannitec.blogspot.com மென்பொருட்கள்// இது மென்பொருட்கள் பற்றி அந்த தளத்தில் மட்டும் தேடும் 

link: என்பது அந்த தளத்திற்கு யாரெல்லாம் இணைப்பு கொடுத்துள்ளனர் என கண்டுபிடிக்கலாம் 
 உதா:  //link:suduthanni.blogspot.com// என்றால் அந்த தளத்திற்கு இணைப்பு கொடுத்த தளங்களை விடையாகத் தரும்

related: என்பதைப் பயன் படுத்தினால் அந்த தளத்திற்கு இணையான வேறு தளங்களைக் காட்டும் 
உதா: //related:vikatan.com// என்றுயிட்டால்  குமுதம், தினமலர், நக்கீரன் போன்ற தளங்களைக்காட்டும் 

filetype:  என்பதைப்பயன்படுத்தி நாம் நமக்குத் தேவையான கோப்புக்களை தேடலாம் 
உதா: jpeg கோப்பாக தேட //filetype:jpeg// என்று உங்கள் கேள்வியுடன் கொடுத்தால் பதில்களெல்லாம் jpeg தான் 

info:  என்று கொடுத்து ஒரு தளத்தைக்கொடுத்தால் அதனுடைய பலதகவல்களைத்தரும் 
உதா: //info:tvs50.blogspot.com//என்றால்  அந்த தளம் பற்றி கூகிள் சேமித்துவைத்துள்ள cache, கூகிள் கொண்டுள்ள அனைத்து லிங்க், மற்றும் பல தகவலை மொத்தமாகத்தரும் 


மேலும் சில கட்டளைகள் கொஞ்சம் தொழிற்நுட்பம் சார்ந்தவை 
cache: என்பதை பயன் படுத்தி அழிந்த பக்கங்களின் தகவல்களை குறிப்பிட்ட காலம் வரை பெறலாம்.
inanchor:
linlink:
datarange: 
author:
group: 
போன்றவைகளை பயன்படுத்தி இன்னும் சிறப்பாக தேடலாம்.

இப்பொது சில கேள்விகள்:
ஒரு தளத்தில் உள்ள jpg  படக்கோப்புகளை மட்டும் தேடவேண்டுமானால் என்ன செய்வது?
//site:neechalkaran.blogspot.com filetype:jpg//  (உங்கள் தளமுகவரியை இட்டுக்கொள்ளவும்) என்று கூகிள் இமேஜில்  போட்டால் போதும்.

ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு இனைப்பு கொடுக்கப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?
//site:ethirneechal.blogspot.com "google.com"// (உங்கள் தளமுகவரியை இட்டுக்கொள்ளவும்) என்று போட்டால் கூகிள் இணைப்பு  எங்கெல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது என  அறியலாம்.

ஒரு நபரைப்பற்றி ஒரு சில தளங்கள் நீங்கலாக தேடுவது எப்படி?
//abdul kalam -site:twitter.com -site:wikipedia.org// என்று இட்டால் அந்த  தளங்களிலிருந்து விடைகள் வராது.
நன்றி : எதிர்நீச்சல்