மு‌ட்டையை அளவோடு சா‌ப்‌பிடு‌ங்க‌ள்

பொதுவாக அசைவ உணவுக‌ளி‌ல் முத‌ல் இட‌ம் ‌பிடி‌ப்பது மு‌ட்டைதா‌ன். எ‌ளிதாக செ‌ய்ய முடிவது‌ம், எ‌ல்லோரு‌க்கு‌ம் ‌பிடி‌த்தமானதாக இரு‌ப்பது‌ம்தா‌ன் இ‌த‌ற்கு‌க் காரண‌ம்.

ஆனா‌ல், உட‌ல் எடை அ‌திகமாக இரு‌ப்பவ‌ர்க‌ள் மு‌ட்டையை அளவோடு சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌‌ள். ‌பிற‌ந்து 1 வயது‌க்கு‌ள்ளான குழ‌ந்தைகளு‌க்கு‌ம் மு‌ட்டை‌யி‌ன் ம‌ஞ்ச‌‌ள் கருவை எ‌ச்ச‌ரி‌க்கையாக‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அ‌றிவுறு‌த்து‌கி‌ன்றன‌ர்.
 
அதாவது, ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச் சத்து இருக்கிறது. மு‌ட்டையை எ‌வ்வாறு சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டாலு‌ம் இ‌ந்த கலோ‌ரி‌ச்ச‌த்துக‌ள் குறைவ‌தி‌ல்லை. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது. அதனால், உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள், படு‌க்கை‌யிலேயே இரு‌க்கு‌ம் நோயா‌ளிக‌ள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.

முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிக அளவில் இருக்கிறது. எனவே, மு‌ட்டை‌யி‌ன் ம‌ஞ்ச‌ள் கருவை ‌ஜீர‌ணி‌க்கவே அ‌திக‌ நேர‌ம் ‌பிடி‌க்கு‌ம். இது நம் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகப்படுத்துவது இல்லை. இருந்தாலும், முட்டையை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. எனவே அ‌திக பருமனானவ‌ர்க‌ள், ஒரு நாளை‌க்கு ஒரு மு‌ட்டை சா‌ப்‌பி‌ட்டா‌ல், அடு‌த்து அ‌திக கொழு‌ப்பு‌ள்ள பொரு‌ட்களை குறைவாக சா‌ப்‌பிடுவதோ அ‌ல்லது சா‌ப்‌பிடாம‌ல் இரு‌ப்பதோ ந‌ல்லது.

சாதாரண உட‌ல் எடை‌யி‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் காலை நேர உணவாக 2 முட்டைகள் சாப்பிட்டு வந்தால் அன்றைய தினம் முழுவதும் சோர்வு இல்லாமல் இயங்கலாம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்சியாளர்கள். ஒரு நாள் முழுக்க மனிதன் இயங்குவதற்கு தேவையான சக்தியை முட்டை தருவதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

உடல் பருமன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க விரும்புபவர்கள், தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை முடிந்தவரை குறைத்து, அதற்கு பதிலாக இரு முட்டைகளை காலை உணவாக எடுத்துக்கொண்டால், அவர்களது உடல் இயங்கு திறனும் பாதிக்கப்படாது, உடல் பருமனும் குறையும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்.

ஆனா‌ல் அதே சமய‌ம், காலை நேர உணவாக மு‌ட்டையை சா‌ப்‌பிடு‌ம்போது, அ‌ந்த நா‌ள் முழு‌க்க கொழு‌ப்பு ‌நிறை‌ந்த உணவுகளை குறைவாக சா‌ப்‌பிடுவதையு‌ம் கவன‌த்‌தி‌ல் கொ‌ள்ள வே‌ண்டியது அ‌வ‌சியமா‌கிறது.

குழ‌ந்தைகளு‌க்கு முத‌லி‌ல் அரை வே‌க்காடாக வேக வை‌த்து அத‌ன் வெ‌‌ள்ளை‌க் கருவை ம‌ட்டு‌ம் கொடு‌த்து சா‌ப்‌பிட‌ப் பழ‌க்க வே‌ண்டு‌ம். ‌பி‌ன்ன‌ர் ‌சி‌றிது ‌சி‌றிதாக அவ‌ர்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் கருவை அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம். வயதானவ‌ர்களு‌க்கு மு‌ட்டையுட‌ன், எ‌ளி‌தி‌ல் ‌ஜீரணமாக‌க் கூடிய உணவுகளை ‌நி‌ச்சய‌ம் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.