நோபல் பரிசு

ஆல்பிரெட் நோபல் இவரின் வாழ்க்கை 1833 தொடங்கி 1896 ல் முடிந்தது இவரின் கட்டுரைகள், கவிதைகள், மற்றும் கதைகள் எழுதுவதில் வல்லவர். இவை அனைத்திற்கும் மேலாக அமைதியை நிலை நாட்ட விரும்புபவர். இவர் 1886ல் டைனமைட்டை கண்டுபிடித்தார்.
இந்த டைனமைட் கண்டுபிடித்ததில் இருந்த சந்தோஷம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஏனெனில் இவரின் டைனமைட் நல்லவைக்கு பயன்படாமல் உலகை அழிக்கும் போர் ஆயுதமாக பயன் படுத்தினர்.

சுவிடனில் நாட்களை கழித்துக் கொண்டிருந்த போது நாம் இவ்வுலகிற்கு ஏதேனும் நல்லதை செய்தே ஆகா வேண்டும் என நினைத்தார். இறப்பதற்கு ஓராண்டு முன்பு "நோபல் பரிசு அமைப்பை" ஏற்படுத்தினர். இந்த அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், உளவியல் (அ) மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசுகள் வழங்க திட்டமிட்டார். இவை உலகின் மிக உயர்ந்த தரமான விருதாக இருக்க வேண்டும் என எண்ணினர். விருது வயங்கினால் மட்டும் போதாதென பெரும் தொகையையும் பரிசாக தர உத்தேசித்து பெரும் செல்வந்தரான இவர் பெரும் தொகையை சுவிடன் வங்கியில் வைப்பு நிதியாக வைத்து அதில் வரும் வட்டி தொகையை ஒவ்வொரு விருதுக்கும் பகிர்ந்தளித்தார்.நோபல் பரிசுகளை ஆய்வு செய்து பரிசுகளை அளிக்க சிறு சிறு குழுக்களை தலைப்பு வாரியாக நியமித்தார். அவற்றின் செயல்பாடுகளை தற்போது பார்போம்.
இலக்கியம் - த சுவிடிஷ் அகாடமி.
உளவியல் (அ) மருத்துவம் - த தகரோளின்ஷ்கா அகாடமி.
இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் - த ராயல் சுவிடேன் அகாடமி ஒப் சயின்செஸ்.
அமைதி - த நோபல் கமிட்டி ஆப் த நார்வே சார்டிங்.

ஆல்பிரெட் நோபல் அவர்கள் 1896 ல் இறந்து போனார் . அதன் பின்பு 1968 சுவிடன் வங்கி ஆல்பிரெட் நோபலின் நினைவாக விருதுப்பட்டியலில் மேலும் ஒரு விருதாக பொருளாதாரம் சேர்க்கப்பட்டது. நோபல் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் சாதித்தவர்களின் விருதுகளில்.
"நீங்களும் தயாராகுங்கள் நோபலுக்கு"