சனிக்கிரகத்தின் சந்திரனின்களின் அழகான புதிய படங்கள்

நாசாவினுடைய கஸ்சினிவிண்கலம் சனிக்கிரகத்தின் சந்திரன்களான மிமஸ்ஸையும்‘ ‘கல்ய்ப்சோவையும்சுற்றி வந்து
மிகத் தெளிவான அட்டகாசமான படங்களை எடுத்து கடந்த வாரம் பூமிக்கு அனுப்பி இருந்தது.
?
சனிக்கிரகத்தின் 62 சந்திரன்களிலே 246 மீட்டர் விட்டம் உள்ள மிமஸ் பருமன் அடிப்படையிலே 20 வதாக உள்ளது, இக் கிரகம் முற்று முழுதாக கோளமானது அல்ல…!
கீழே ?உள்ள படத்தை பார்க்க; இப் புகைப்படம் கிட்டத்தட்ட 15,000 மைல்களுக்கப்பால் இருந்து எடுக்கப்பட்டது.

இந்த புகைப்படம் ‘மிமஸ்ஸிற்கு’ 11,000 மைல் அருகில் சென்று கடந்த பெப்பிரவரி 13ந் திகதி நாசாவின் ‘கஸ்சினி’ விண்கலத்தினால் எடுக்கப்பட்டது.
கல்ய்ப்சோ, கீழே உள்ள படத்தில் உள்ளது,இது தட்டையான அமைப்பை உடையது, ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டது.
கஸ்சின் விண்கலம் சனிக்கிரகத்தை கடந்த 2004ம் ஆண்டு முதல் ஆராய்ந்து வருகின்றது, இது 2017ம் ஆண்டு வரை ஆராய்ச்சியில் இருந்து மேலும் மேலும்
புதிய படங்களை பூமிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது..