எந்தவித மென்பொருளும் பயன்படுத்தாமல் இணையவேகத்தினை அதிகரிப்பது எப்படி?


இயந்திரமயமான உலகில் இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் இணையம். கல்வி,தொடர்பாடல்,பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல விடயங்களில் இணையம் என்பது மிக ஆழ வேரூன்றிவிட்டது. அப்படிபட்ட வேகமாக செல்லும் இணைய உலகில் இணைய வேகம் என்பது சில இடங்களில் மிக வேகம் குறைந்ததாகவே காணப்படுகின்றது. அத்தகைய வேகம் குறைந்த கணனிகளில் இணையவேகத்தினை எதுவித மென்பொருளின் உதவியுமின்றி அதிகரிப்பது எப்படி என்பது தான் இப்பதிவின் நோக்கம்.
இனி எவ்வாறு இணைய வேகத்தினை அதிகரிப்பது எனப்பார்ப்போம்.
1.முதலில் கணனியில் Start சென்று Run என்பதை அழுத்துங்கள்.
       ( Click Start >>>Run)

2.பின்னர் வரும் Run இல் gpedit.msc என தட்டச்சு செய்து Enter விசையை (Enter Key) அழுத்துங்கள்.


3.அழுத்தியபின் Policy Editor என்னும் சாளரம்(Window) திறக்கப்படும்..இந்த சாளரத்தில் Local Computer Policy என்பதை அழுத்தி Computer Configuration என்பதை தெரிவுசெய்யுங்கள்.
      (Local Computer Policy >>> Computer configuration)

5.பின்னர் Administrative Templates என்பதை தெரிவுசெய்து அதில் Network என்பதை அழுத்துங்கள்.
        (Administative templates >>>Network)

6.பின்னர் QoS Packet Scheduler என்பதினை தெரிவுசெய்யுங்கள்.

7.பின்னர் தோன்றும் சாளரத்தின் (Window) இடது பக்க பகுதியில் Limit reservable bandwidth என்பதினை இரட்டை சொடுக்கின் மூலம் (Double Click) திறந்துகொள்ளுங்கள்.

8.பின்னர் தோன்றும் சாளரத்தில் (Limit reservable bandwidth Properties Window) Setting என்னும் பகுதியில் Enabled என்பதினை தெரிவுசெய்யுங்கள். ( முன்னர் இதில் Not Configured என்பது தெரிவுசெய்யப்பட்டிருக்கும்.)

9.Enabled என்பதினை தெரிவுசெய்தபின் Bandwidth limit(%) என்னும் இடத்தில்  0 (Zero) என்பதினை வழங்குங்கள். ( அதில் ஏற்கனவே 20 ஆகக்காணப்படும்)