மருந்து மாத்திரைகளினால் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது : மருத்துவ ஆய்வு


மருந்து மாத்திரைகளினால் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என பிரித்தானிய மற்றும் அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியனவே நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடிய சிறந்த வழிமுறைகள் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து முழுயைமாக விடுபட முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

9000 பேரிடம் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மருந்துகளை உட்கொள்வதனால் எதிர்காலத்தில் இருதய நோய் ஏற்படுவதனை தடுக்க முடியும் என்ற கருத்திலும் உண்மையில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் அதனால் ஏற்படக் கூடிய ஏனைய நோய்களை கட்டுப்படுத்தவும் கூடிய மருந்துப் பொருட்களின் தேவை விஞ்சி நிற்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது பாவனையில் உள்ள அநேக மருந்துப் பொருட்களின் மூலம் இந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவதில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.