பிளாக்கரில் சிறப்பு இடுகைகளை பிரித்து காட்டுவது எப்படி?

பிளாக்கரில் நாம் பதிவிடும் போது ஒவ்வொரு இடுகைகளையும் அதிக சிரத்தையுடன் தான் எழுதி வருகிறோம். நாம் எழுதும் இடுகைகளில் அதிக வரவேற்பை பெற்ற சிறப்பான இடுகைகள் இருக்கும். தினமும் நம் வலைப்பதிவிற்கு வருகை தரும் புது வாசகர் நமது சிறந்த இடுகைகளை தேடி பிடித்து படிப்பாரா என்பது சந்தேகம்தான்.

நம் வலைப்பதிவில் நாம் சிறந்தது, அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று விரும்பும் இடுகைகளை தனியே பிரித்து பட்டியலிட்டு வாசகர்களுக்கு காட்டலாம். நான் இந்த பிளாக்கில் வலது புறம் சிறப்பு இடுகைகள் என்று பட்டியலிட்டு உள்ளதை போன்று.  அதை எவ்வாறு எளிதாக செய்வது என்று பார்ப்போம்.


நீங்கள் சிறப்பான இடுகையை தேர்ந்தெடுத்து அந்த இடுகையை எழுதும் போதோ அல்லது அந்த இடுகையை எடிட் செய்து அதன் 'Lables' பகுதியில் 'சிறப்பு' என்ற வார்த்தையையும் சேர்த்து விட்டு பப்ளிஷ் செய்து கொள்ளுங்கள்.அடுத்து பிளாக்கரின் டாஷ்போர்ட் சென்று 'Layout' --> 'Page Elements' கிளிக் செய்து கொள்ளுங்கள். அங்கு 'Add a Gadget' கிளிக் செய்து வரும் விண்டோவில் 'Feed' என்பதற்கு வலது புறம் வரும் '+' ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து வரும் விண்டோவில் "http//உங்கள்பிளாக்.blogspot.com/feeds/posts/default/-/சிறப்பு " என்ற முவரியை கொடுத்து 'Continue' கிளிக் செய்து Save செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான். இப்போது நீங்கள் 'சிறப்பு' என்று லேபிள் கொடுத்து பப்ளிஷ் செய்த இடுகைகள் பட்டியலிட்டு காட்டப்படும். இனி எதிர்காலத்தில் நீங்கள் 'சிறப்பு' என்று லேபிள் கொடுத்து பப்ளிஷ் செய்யும் இடுகைகளும் தானாக தோன்றும். எதிர்காலத்தில் ஒவ்வொரு முறையும் உங்கள் சிறப்பு இடுகைக்கான லிங்க்கை அங்கு சென்று இணைக்க வேண்டியதில்லை. லேபிளில் 'சிறப்பு' என்று கொடுத்து பப்ளிஷ் செய்தாலே போதுமானது. உதாரணத்திற்கு நான் இந்த இடுகைக்கு 'சிறப்பு' என்று லேபிள் கொடுத்து பப்ளிஷ் செய்து உள்ளேன். அது தானாகவே சிறப்பு இடுகைகள் பகுதியில் பட்டியலிடப்பட்டு விட்டது.

இதன் மூலம் உங்கள் வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய சிறந்த இடுகைகளை பரிந்துரை செய்து உங்கள் பிளாக்கை அதிகம் கவனம் பெற செய்யுங்கள்.