பெயரில்லாமல் கோப்புறையை உருவாக்கல்


 பெயரில்லாமல் ஒரு கோப்புறையை (Folder) உங்களால் உருவாக்க முடியுமா? கணினியில் இருக்கும் ஒவ்வொரு கோப்பும்(File),கோப்புறையும்(Folder) ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில்(Windows) கோப்புறை (Folder) ஒன்றை அதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும்.

பெயரை வழங்காதுவிடின் New Folder எனும் பெயரை விண்டோஸ் முன்னிருப்பாக(default) போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அப்போது பெயரில்லாமல் கோப்புறையை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப Space Bar விசையையோ(Key) Delete விசையையோ(key) அழுத்தினாலும் New Folder எனனும் பெயரையே விண்டோஸ் எடுத்துக் கொள்ளும்.

நான் சொல்வது சரிதானா என்பதை கணினி முன்னே உட்கார்ந்து ஒரு முறை முயன்று பார்த்து விட்டு கீழே சொல்லப்படும் வழி முறையைப் படியுங்கள்.

முதலில் போல்டர் ஒன்றை உருவாக்குங்கள். அதன் பெயரை (text label) அழித்து விட்டு விசைப்பலகையில்(Keyboard) ‘Alt’ கீயை அழுத்தியவாறே இலக்கம் ‘255′ ஐ டைப் செய்யுங்கள். அப்போது பெயரில்லாமல் ஒரு கோப்புறை தோன்றக் காணலாம். இலக்கத்தை தட்டச்சு செய்ய விசைப்பலகையில் எண்ணியல் விசைப்பலகையையே(Numeric Keyboard) பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில்