நகைச்சுவைத்துணுக்கு 1

அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற?அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.
 **********

குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா?நாம கேட்டா கொடுப்பாரா... ***********

உங்க வீட்டில் இன்று சாம்பாரா?எப்படி கண்டுபிடித்தீர்கள்?
நான் மூக்காலும் உணர்ந்தவன்.
**********

வருடத்தில் எத்தனை மாதத்தில் 28 நாட்கள் உள்ளது?எல்லாத மாதத்திலும் 28 நாள் உள்ளது.
**********

கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்?இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்கள்.

**********

மிகவும் மக்கான ஊர் எது?மாமண்டூர்.
**********

ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தா ன். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான்.என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.
உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா
ஆமாம்
எங்கே தொலைத்தாய்?
அடுத்த தெருவில் தொலைத்தேன்.
அதை இங்கே ஏன் தேடுகிறாய்?
அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்.
************


நம்ம கபாலி ரொம்ப சின்சியர்எப்படி சார்?
நேத்து நைட் 12 மணிக்கு திருடிட்டு, ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து மாமூல் கொடுத்துட்டு போறான்.
*********